நடிகர் அஜித்குமார் படங்கள்: எக்ஸ் / சுரேஷ் சந்திரா.
செய்திகள்

படப்பிடிப்பை முடித்து பார்சிலோனா செல்லும் அஜித்!

நடிகர் அஜித்குமார் குட் பேட் அக்லி படப்பிடிப்பை முடித்து பார்சிலோனா செல்லவிருப்பதாக ரேஸிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

DIN

நடிகர் அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்திற்காக வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருக்கிறார். அங்கு, இவருக்கான முக்கியமான காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காரணம், இதில் அஜித் மூன்று வெவ்வேறு தோற்றங்களில் நடிக்கிறார்.

தற்போது, அஜித்துடன் அர்ஜுன் தாஸ் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட நடிகர்கள் படப்பிடிப்பில் இணைந்துள்ளனர்.

குட் பேட் அக்லி படத்தை பொங்கல் வெளியீடாக திரைக்குக் கொண்டுவர தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது.

அஜித் இந்தப் படத்துக்குப் பிறகு ரேஸிங்கில் பங்கேற்கவிருக்கிறார். இந்த நிலையில் வீனஸ் மோட்டர்ஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:

பல்கேரியாவில் நடைபெற்றுவரும் குட் பேட் அக்லியின் படப்பிடிப்பு நவ.24இல் முடிவடையவிருக்கிறது. இதனையடுத்து அஜித்குமார் பார்சிலோனா வரவிருக்கிறார்.

நவ.27முதல் அணியுடன் சேர்ந்து தீவிரமான பயிற்சியில் ஈடுபடவிருக்கிறார். பயிற்சிக்கான புகைப்படங்கள், விடியோக்களுக்கு காத்திருங்கள்.

அவருக்கும் அணியினருக்கும் வாழ்த்து தெரிவிக்க எங்களுடன் இணைந்திடுங்கள். சிறப்பான ரேஸிங் சீசனுக்காக வாழ்த்துகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உளவுத்துறையில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

நலம்பெற்றுப் பங்கேற்ற முதல் நிகழ்ச்சி: முதல்வர் நெகிழ்ச்சி!

பிராட்மேனின் 90 ஆண்டுகால சாதனையை முறியடிப்பாரா ஷுப்மன் கில்?

விழிகளால் பேசு... ஹூமா குரேஷி

இந்தப் படத்தைப் பார்த்தீர்களா? பிளாக்பஸ்டரான சு ஃப்ரம் சோ!

SCROLL FOR NEXT