ஆல்யா மானசாவுடன் சஞ்சய் இன்ஸ்டாகிராம்
செய்திகள்

ராஜா ராணி - 3! சஞ்சீவ் - ஆல்யா மானசா பதிவு!

சின்னத்திரையில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற ராஜா ராணி தொடரின் 3ஆம் பாகம் விரைவில் உருவாகவுள்ளதாகத் தெரிகிறது.

DIN

சின்னத்திரையில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற ராஜா ராணி தொடரின் 3ஆம் பாகம் விரைவில் உருவாகவுள்ளதாகத் தெரிகிறது.

ராஜா ராணி தொடரின் முதல் பாகத்தில் நடித்த சஞ்சீவ் தனது சமூகவலைதளப் பக்கத்தில் ராஜா ராணி 3ஆம் பாகம் குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.

ராஜா ராணி தொடரில் இணைந்து நடித்த சஞ்சீவ் - ஆல்யா மானசா ஜோடி, காதலித்து திருமணம் செய்துகொண்டு நிஜ வாழ்க்கை ஜோடியாகவும் மாறனர். இதனால் நாயகியாக 3ஆம் பாகத்திலும் ஆல்யா மானசாவே நடிக்க இருப்பதாகவும் தெரிகிறது.

இதனால் ராஜா ராணி தொடரின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017 முதல் ராஜா ராணி தொடர் ஒளிபரப்பானது. 2019 வரை ஒளிபரப்பான இந்தத் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது.

ராஜா ராணி தொடரில் சஞ்சீவ் - ஆல்யா மானசா ஜோடி சேர்ந்து நடித்திருந்தனர். அவர்களின் நடிப்பும் இந்தத் தொடரில் மிகவும் பாராட்டப்பட்டது.

ராஜா ராணி

ராஜா ராணி தொடர் வங்க மொழித் தொடரான கீர் அபோன் கீர் போர் என்ற தொடரின் மறுஉருவாக்கமாகும். எனினும் தமிழில் அதிக டிஆர்பி பெற்றதால், இந்தத் தொடரின் இரண்டாம் பாகம் உருவானது.

இதையும் படிக்க | ரசிகர்கள் எதிர்பார்ப்புக்கு மாறான நேரத்தில் ஒளிபரப்பாகும் புதிய தொடர்!

இதில் ஆல்யா மானசா நாயகியாக நடித்தார். ஆனால் சஞ்சீவ் கார்த்திக்கிற்கு பதிலாக சித்து நாயகனாக நடித்தார். இவர்களுடன் ஆஷா கெளடா, அர்ச்சனா ரவிச்சத்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்நிலையில் இத்தொடரின் 3வது பாகம் விரைவில் உருவாகவுள்ளதாக சஞ்சீவ் தெரிவித்துள்ளார். ராஜா ராணி தொடரின் இரு பாகங்களை இயக்கிய பிரவீன் பென்னட் மற்றும் ஆல்யா உடன் இருக்கும் புகைப்படத்தை சஞ்சீவ் பகிர்ந்துள்ளார். அதில், தயாராயிருங்கள் நண்பர்களே, ராஜா ராணி 3ஆவது பாகம் விரைவில் எனப் பதிவிட்டுள்ளார்.

இதனால் ராஜா ராணி தொடரின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

சஞ்சீவ் கார்த்தி பதிவு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுமை ஆட்டோ மோதி தொழிலாளி பலி

முகமது சின்வார் கொல்லப்பட்டார்: ஒப்புக்கொண்ட ஹமாஸ்!

வெண்கலப் பதக்கம் வென்றது சாத்விக்/சிராஷ் இணை!

உலக தடகள சாம்பியன்ஷிப்: 19 பேருடன் இந்திய அணி

உலகப் பொருளாதாரத்தைச் சீண்டும் ‘டிரம்ப் வரி’!

SCROLL FOR NEXT