செய்திகள்

49-வது வயதில் மீண்டும் சிக்ஸ்பேக் வைத்திருக்கிறேன்: சூர்யா

நடிகர் சூர்யா கங்குவா திரைப்படம் குறித்து பேசியிருக்கிறார்.

DIN

நடிகர் சூர்யா ரசிகர்களுக்காக 49-வது வயதிலும் சிக்ஸ்பேக் வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா நடிப்பில் உருவான கங்குவா திரைப்பட நவ.14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கான, புரமோஷன்கள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. முக்கியமாக, வட இந்தியாவில் மட்டும் 3500 திரைகளில் படம் வெளியாவதால் அங்கு கூடுதல் கவனமெடுத்து சூர்யா, இயக்குநர் சிவா உள்பட படக்குழுவினர் நேர்காணல்களில் கலந்துகொண்டு படத்திற்கான ஆவலைத் தூண்டி வருகின்றனர்.

அப்படி, நடிகர் சூர்யா மும்பையில் நேர்காணல் நிகழ்வில் கலந்துகொண்டார். அங்கு தமிழ் ரசிகர்களுடனான உரையாடலும் நடைபெற்றது.

நேர்காணலில் பேசிய சூர்யா, “கங்குவா திரைப்படத்திற்காகக் கடுமையான உழைப்பைக் கொடுத்திருக்கிறோம். ஒரு குழந்தையைப்போல் இரண்டு ஆண்டுகளாக உருவான படமிது. மற்ற மொழிகளிலிருந்து பாகுபலி, ஆர்ஆர்ஆர், கல்கி போன்ற பிரம்மாண்ட படங்கள் வந்துவிட்டன. தமிழில் கங்குவா திரைப்படமே அதற்கான அடியை எடுத்து வைத்திருக்கிறது.

கீழடியில் 1800 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்களின் சுவடுகள் கிடைத்திருக்கின்றன. பல நாடுகளுக்கு 500 ஆண்டுகால வரலாறுகூட இல்லை. ஆனால், தமிழ் மொழியின் தொல்லியல் சான்றுகளுக்கும் இலக்கியத்துக்கும் 2500 ஆண்டுகால வரலாறு இருக்கிறது. இந்த வரலாற்றைக் கொண்டு கங்குவாவின் கதையை என்னால் உணர முடிந்தது.

நேருக்கு நேர் வெளியானபோது திரையரங்கில் விசிலடித்து உற்சாகப்படுத்திய ரசிகர்களுக்கும் எனக்கும் எந்தத் தொப்புள் கொடி உறவும் இல்லை. அவர்களின் அன்பிற்காக எதையாவதை செய்துகொண்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். காலங்கள் மாறிக்கொண்டிருக்கின்றன. எனக்கும் 49 வயதாகிவிட்டது; புதிய தலைமுறை பார்வையாளர்கள் வந்துவிட்டனர்.

ஆனாலும், அவர்களின் அன்பும் ஆதரவும் இப்போதும் எனக்குக் கிடைத்துக்கொண்டிருக்கிறது. அதற்கு, உண்மையாக இருக்க வேண்டும் என்பதால் 49-வது வயதில் கங்குவா படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக் வைத்திருக்கிறேன். இந்திய சினிமாவில் கங்குவா நீண்ட நாள் பேசப்படும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோட்டை 7 முக்தி அளிக்கும் சக்தி பீடங்கள்...!

சென்னிமலை முருகனுக்கு பாலாபிஷேக பெரு விழா

அதிக லாபத்துடன் இயங்கும் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை

ஒகேனக்கல்லில் ஆடிப் பெருக்கு விழா: ரூ. 1.07 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி அமைச்சா் வழங்கினாா்

‘எண்ணும் எழுத்தும்’ திட்டம்: கண்காணிப்பு அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT