முகப்பு
செய்திகள்

விரைவில் கைதி - 2: லோகேஷ் கனகராஜ்!

கைதி திரைப்படம் வெளியாகி 5-ஆம் ஆண்டை நிறைவு செய்துள்ளது.

Updated On : 25 அக்டோபர் 2024, 2:19 pm IST
கைதி திரைப்படத்தில் நடிகர் கார்த்தி. - Din
பகிர்:

கைதி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கான அப்டேட்டை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் கார்த்தி கூட்டணியில் உருவான கைதி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமானது. இப்படத்திற்குப் பின்பே லோகேஷ் கனகராஜ் பிரபலமடைந்தார். தொடர்ந்து, மாஸ்டர், விக்ரம், லியோ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கினார்.

தற்போது, நடிகர் ரஜினிகாந்தை வைத்து கூலி திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

Advertisement

இந்த நிலையில், கைதி திரைப்படம் வெளியாகி 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை தொடர்ந்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

“எல்லாம் இங்கிருந்துதான் தொடங்கியது. கார்த்திக் மற்றும் எஸ்.ஆர்.பிரபுவுக்கு நன்றி. இவர்களால்தான் ‘லோகேஷ் யுனிவர்ஸ்’ சாத்தியமானது.

விரைவில் டில்லி திரும்ப வருவார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவின் மூலம், கூலி திரைப்படத்துக்கு பிறகு கார்த்தியின் கைதி 2-ஆம் பாகத்தை இயக்கவுள்ளதை லோகேஷ் கனகராஜ் உறுதி செய்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.