வாழ்த்துகள் அண்ணா... முதல்வர் விஜய்யுடன் லோகேஷ் கனகராஜ்!
முதல்வர் விஜய்யைச் சந்தித்த லோகேஷ் கனகராஜ்...
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதல்வர் விஜய்யைச் சந்தித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடிகர், இயக்குநர் என யாராவது குறுகிய காலங்களிலேயே பெரிய உச்சத்திற்கு செல்வார்கள். அப்படி, தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்குவதிலும் எதிர்பார்ப்பை எகிறச் செய்வதிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
மாநகரம் என்கிற நல்ல படம் அடுத்தடுத்த படங்களுக்கான கதவுகளைத் திறந்து வைத்தாலும் கைதி திரைப்படமே லோகேஷை முக்கியமான இயக்குநராக மாற்றியது. அப்படத்தின் வெற்றியால் வணிக ரீதியாக பெரிய பட்ஜெட்கள் கிடைக்க மாஸ்டர், விக்ரம் என வெற்றிப்படங்கள் கொடுத்தார்.
Advertisement
Advertisement
தொடர்ந்து, லியோ மூலம் இந்தியளவில் ஆக்சன் இயக்குநருக்கான பட்டியலிலும் லோகேஷ் இணைந்தார். அப்படம் கலவையான விமர்சனங்களைச் சந்தித்தாலும் தமிழில் ரூ. 50 கோடி சம்பளம் வாங்கிய முதல் இயக்குநர் என்கிற பெயருடன் கூலியை இயக்கினார்.
இருந்தாலும், லோகேஷ் கனகராஜ் முதல்வர் விஜய்யை வைத்து இயக்கிய மாஸ்டர், லியோ ஆகியவை உருவாக்க ரீதியாக விஜய் ரசிகர்களிடம் திருப்தியைக் கொடுத்தது. அப்படங்களின் பின்னணி இசைகள் இன்றும் அதிகம் கேட்கப்பட்டு வருகின்றன. லியோ - 2 திரைப்படத்தை லோகேஷ் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விஜய் அரசியலுக்கு வந்து முதல்வராகவும் ஆகிவிட்டார்.
இந்த நிலையில், நேரில் அவரைச் சந்தித்த லோகேஷ் கனகராஜ், “மாண்புமிகு முதலமைச்சர்.... வாழ்த்துகள் அண்ணா” என பதிவிட்டு தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார்.
Director Lokesh Kanagaraj has met Chief Minister Vijay.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.