லோகேஷ் கனகராஜ் நடித்த டிசி திரைப்படத்தின் பாடல் அப்டேட்!
டிசி திரைப்படத்தின் புதிய இசை குறித்து..
லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடித்துள்ள டிசி திரைப்படத்தின் புதிய இசை விடியோ குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நாயகனாக அறிமுகமாகும் புதிய திரைப்படம் “டிசி”.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில், தேவதாஸ் என்கிற கதாபாத்திரத்தில் லோகேஷ் கனகராஜும், சந்திராவாக நடிகை வாமிகா கபியும் நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ள “டிசி” படத்தின் டிரைலர் கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளியானதுடன், அதில் இடம்பெற்ற ”ராகா ஆஃப் ரிவெஞ்” எனும் பின்னணி இசை சமூக ஊடகங்களில் வைரலாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.
தற்போது, ஹேங்க் ஓவா (hangova) எனப் பெயரிட்ட இப்படத்தின் புதிய இசை விடியோவை நாளை (ஜூலை 6) மாலை 6 மணிக்கு வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர். அனிருத் இசையமைப்பு என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Details have emerged regarding a new music video for the DC film starring Lokesh Kanagaraj as the lead.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.