FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

ஈடு இணையற்றவர்! - டிசி பட இசைக்காக அனிருத்தை பாராட்டிய சிவகார்த்திகேயன்!

டிசி படக்குழுவை நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டியுள்ளது குறித்து...

Updated On : 13 ஆகஸ்ட் 2026, 7:48 pm IST
சிவகார்த்திகேயன் - அனிருத் - Insta
பகிர்:

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடித்து வெளியான “டிசி” திரைப்படக்குழுவை நடிகர் சிவகாரத்திகேயன் பாராட்டியுள்ளார்.

தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநரான லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடித்து இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வெளியான படம் “டிசி”. இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தில், வாமிகா கபி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், டிசி திரைப்படக் குழுவைப் பாராட்டி நடிகர் சிவகார்த்திகேயன் இன்று (ஆக. 13) தனது இன்ஸ்டா பக்கத்தில் ஸ்டோரி பதிவிட்டுள்ளார்.

இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

“டிசி ஒரு அதிரடியான் மிகச் சிறந்த திரை அனுபவமாக அமைந்தது. லோகேஷ் கனகராஜ் மற்றும் அருண் மாதேஸ்வரன் ஆகியோர் இணைந்து, விறுவிறுப்பான தருணங்கள் நிறைந்த ஒரு வலுவான ஆக்‌ஷன் படத்தை வழங்கியுள்ளனர்.

இவ்வளவு அற்புதமான படத்தை உருவாக்கிய ஒட்டுமொத்த குழுவிற்கும், அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துகள்.

மேலும், என் இனிய நண்பர் அனிருத்,

நீங்கள் உங்களுக்கென ஒரு தனித்துவமான அரியணையை உருவாக்கி, அதில் கம்பீரமாக ஆதிக்கம் செலுத்துவதைக் கண்டு நான் பெருமிதம் கொள்கிறேன்; நீங்கள் உண்மையிலேயே ஈடு இணையற்றவர்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இப்படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளையும் ரசிக்கக்கூடிய வகையில் அனிருத் இசையமைத்துள்ளதாக விமர்சகர்கள் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

summary

Actor Sivakarthikeyan has praised the team behind the film "DC," in which director Lokesh Kanagaraj starred as the lead.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments