அனிருத் சம்பவம்... வரவேற்பைப் பெறும் டிசி திரைப்படம்!
டிசி திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது...
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் உருவான டிசி திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நாயகனாக அறிமுகமாகும் படம் “டிசி”. இப்படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இசையமைப்பாளர் அனிருத் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர்கள் வாமிகா கபி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஆக்ஷன் படமாக உருவான இதில் அனிருத்தின் பின்னணி இசைகள் அனைத்தும் கொண்டாடப்பட்டதால் படத்தின் வன்முறைக் காட்சிகளுக்கு அவர் பயன்படுத்திய இசைகள் அபாரமாக இருந்ததாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
மேலும், நடிகராகவும் லோகேஷ் கனகராஜுக்கு சிறப்பான திரைப்படமாக இது அமைந்துவிட்டதாகவும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால், இப்படம் வணிக ரீதியாக நல்ல வெற்றியைப் பெறலாம் என்றே தெரிகிறது.
The DC film featuring director Lokesh Kanagaraj is receiving good reviews.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.