FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

விரைவில்... அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்!

லோகேஷ் கனகராஜின் புதிய பதிவு குறித்து...

12 அக்டோபர் 2026, 3:24 pm IST
இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் அல்லு அர்ஜுன்
பகிர்:

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் அல்லு அர்ஜுனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூலி திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து புதிய படம் எடுப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இப்படத்தின் அறிவிப்பு விடியோ வெளியாகி கவனத்தைப் பெற்றது. அனிருத் இசையமைத்த பின்னணி இசையும் வைரலானது. ரூ. 700 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தின் பணிகளுக்காக லோகேஷ் கனகராஜ் ஹைதராபாத்தில் உள்ளார். அங்கு, படப்பிடிப்பு திட்டங்கள் மற்றும் எழுத்து பணிகளும் நடைபெற்று வருகிறதாம்.

Advertisement

Advertisement

இப்படத்தின் நாயகியாக நடிகை பூஜா ஹெக்டேவை ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் அல்லு அர்ஜுனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, சுவாரஸ்யமான அப்டேட்கள் விரைவில் வருகின்றன எனத் தெரிவித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

Director Lokesh Kanagaraj has released a photo of himself with actor Allu Arjun.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments