FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

லோகேஷ் கனகராஜின் டிசி படத்தைப் பாராட்டிய சூர்யா!

லோகேஷ் கனகராஜ் நடிப்பில் வெளியான டிசி படத்தை நடிகர் சூர்யா பாராட்டியுள்ளது பற்றி...

Updated On : 8 ஆகஸ்ட் 2026, 4:44 pm IST
லோகேஷ் கனகராஜ் நடிப்பில் வெளியான டிசி படத்தை நடிகர் சூர்யா. - எக்ஸ், கோப்புப் படம்
பகிர்:

லோகேஷ் கனகராஜ் நடிப்பில் வெளியான டிசி படத்தை நடிகர் சூர்யா பாராட்டியுள்ளார்.

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடித்து கடந்த ஆக. 7 ஆம் தேதி வெளியான படம் டிசி. ஆக்‌ஷன் படமாக வெளியான டிசி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இதில், தேவதாஸ் என்கிற கதாபாத்திரத்தில் லோகேஷும் சந்திராவாக நடிகை வாமிகா கபியும் நடித்துள்ளனர். மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியும் நடித்துள்ளார்.

Advertisement

Advertisement

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். அனிருத்தின் பின்னனி இசை மற்றும் பாடல்கள் இப்படத்துக்கு மேலும் வலுசேர்ப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

இதுகுறித்து நடிகர் சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில், “லோகேஷ் கனகராஜுக்கும், அருண் மாதேஸ்வரனுக்கும் மனமாரந்த வாழ்த்துகள். அனைவரும் டிசி படத்தைப் பற்றி பேசுவதையும் அதனை ரசிப்பதையும் கேட்டு வருகிறேன். அனிருத்தின் சிறந்த இசைக்காகவும் படக்குழுவினருக்காகவும் மகிழ்கிறேன். வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

summary

Actor Suriya has praised the film DC

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments