FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ரூ. 100 கோடி வசூலில் இணைந்த டிசி!

லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள டிசி திரைப்படத்தின் வசூல் குறித்து...

19 வினாடிகள் முன்பு
டிசி வசூல் - Youtube
பகிர்:

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கதைநாயகனாக நடித்து வெளியான டிசி திரைப்படம், ரூ. 100 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநரான லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடித்து இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வெளியான படம் “டிசி”.

அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தில், வாமிகா கபி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Advertisement

Advertisement

ஆக்‌ஷன் கதைக்களத்தில் உருவான டிசி, ஆக. 7-ல் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

லோகேஷ் கனகராஜ் நடிப்பும் அனைவராலும் பாரட்டப்பட்டு வரும் நிலையில், இப்படத்தின் வசூல் நிலவரம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. டிசி வெளியாகிய 15 நாள்களிலேயே உலகளவில் ரூ. 100 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

summary

Box office collection of the DC film featuring Lokesh Kanagaraj

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments