செய்திகள்

நிறங்கள் மூன்று அப்டேட்!

DIN

நடிகர் அதர்வா நடிப்பில் உருவான நிறங்கள் மூன்று திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் கார்த்திக் நரேன், அதர்வா முரளியுடன் இணைந்து உருவாக்கிய திரைப்படமான 'நிறங்கள் மூன்று' படப்பிடிப்பு முடிந்தும் நீண்ட நாள்களாக வெளியீட்டிற்குக் காத்திருக்கிறது. இதில் அம்மு அபிராமி நாயகியாக நடித்துள்ளார். 

தயாரிப்பாளர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னை காரணமாக படம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இவர் இயக்கிய நரகாசூரன் படம் வெளியாகாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இப்படத்தில் நடிகர்கள் சரத்குமார், ரஹ்மான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். 

இந்த நிலையில், இப்படத்தின் வெளியீட்டுத் தேதி நாளை (நவ. 1) மாலை 5.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேசத்தில் டெங்கு பரவல்! 24 மணிநேரத்தில் புதியதாக 1,147 பாதிப்புகள் உறுதி!

இரண்டு நாள் சுற்றுப்பயணம்! வேலூரில் துணை முதல்வர் நடைபயிற்சி!

பிளஸ் 2 கணக்குப்பதிவியல் தேர்வு: முதல்முறையாக கால்குலேட்டர் அனுமதி!

கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை! முதல்வர் ஸ்டாலின்

கமல் பிறந்த நாளில் மறுவெளியீடாகும் 2 திரைப்படங்கள்!

SCROLL FOR NEXT