காதலியை கரம்பிடித்த சின்னத்திரை நடிகர்!
சின்னத்திரை நடிகர்கள் மற்றும் அவரின் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பொன்னி சி/ஓ ராணி தொடரில் நடித்துவரும் நடிகர் அர்ஜுன் ஆறுமுகம் தனது நீண்ட நாள் காதலியைக் கரம்பிடித்தார்.
சென்னையில் எளிமையான முறையில் நடைபெற்ற அவரின் திருமணத்தில் உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
நடிகர் அர்ஜுனுக்கு அவரின் ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பொன்னி சி/ஓ ராணி தொடரில் சூரியா பாத்திரத்தில் நடிகர் அர்ஜுன் நடித்து வருகிறார். சின்னத்திரையில் பல நட்சத்திர நிகழ்ச்சிகளில் இவர் பங்கேற்றுள்ளார்.
பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடிகை ராதிகாவின் தாயம்மா உள்ளிட்ட தொடர்களிலும் அர்ஜுன் ஆறுமுகம் நடித்துள்ளார்.
இதனிடையே தனது நீண்ட நாள் காதலியை பெற்றோர் சம்மதத்துடன் நடிகர் அர்ஜுன் கரம் பிடித்துள்ளார். மேலும், திருமணப் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள நடிகர் அர்ஜுன், புதிய தொடக்கம். அன்பு மற்றும் மகிழ்ச்சியுடன் ஒவ்வொரு கணத்தையும் நேசிப்பதாக உறுதியளிக்கிறேன். அதிகாரப்பூர்வமாக நாங்கள் இணைந்துவிட்டோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். வாழ்க்கையின் அனைத்து பரிமாணங்களையும் இணைந்து அனுபவிக்க தயாராகியுள்ளோம் எனப் பதிவிட்டுள்ளார்.
அவரின் இந்த பதிவுக்கு சின்னத்திரை நடிகர்கள் மற்றும் அவரின் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.