நடிகை செளந்தர்யா 
செய்திகள்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் செளந்தர்யா!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக நடிகை செளந்தர்யா.

DIN

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6-வது சீசனில் பிக் பாஸ் பிரபலம் நடிகை செளந்தர்யா பங்கேற்கவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் நடைபெற்று முடிந்துள்ளது. விரைவில் 6-வது சீசன் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.

சமையல் நிகழ்ச்சியை நகைச்சுவையுடன் கலந்து ஒளிபரப்பு செய்யப்படுவதால் இந்நிகழ்ச்சிக்கு பலதரப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். எப்போதும் இந்நிகழ்ச்சிக்கு டிஆர்பி புள்ளிகள் அதிகமாகவே இருக்கும்

சமையல் கலைஞர்கள் தாமு, மாதம்பட்டி ரங்கராஜன் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்கவுள்ளனர். அதேபோல, ரக்‌ஷன் மற்றும் புகழ் தொகுப்பாளராக பங்கேற்கிறார்கள்.

இந்த புதிய சீசனில் பங்கேற்கவுள்ள குக்குகள் தேர்வு நடைபெற்று வருகிறது. முந்தைய சீசன்களில் பங்கேற்ற கோமாளிகளும்(சமையல் தெரியதாவர்), புதிதாக சில கோமாளிகளும் இந்த சீசனில் பங்கேற்கவுள்ளனர்.

இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இரண்டாம் இடத்தைப் பிடித்த நடிகை செளந்தர்யா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்கவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே சில இணையத் தொடர்களிலும் பாடல்களிலும் செளந்தர்யா நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார்.

குக் வித் கோமாளியில் நடிகை செளந்தர்யா பங்கேற்கவுள்ள தகவல் அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: நிறைவடையும் ரஞ்சனி சீரியல்: அன்னம் தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மூடப்படாத ரயில்வே கடவுப் பாதை! கேட் கீப்பர் பணியிடை நீக்கம்!

ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் மேகவெடிப்பு: 4 பேர் பலி; 6 பேர் காயம்!

அயர்லாந்தில் இந்தியர்கள் மீது தொடரும் இனவெறித் தாக்குதல்கள்!

தருமபுரியில் ரூ. 512 கோடியில் புதிய திட்டங்கள்: முதல்வர் தொடக்கி வைத்தார்!

பணியின்போது மாரடைப்பால் நடத்துநர் பலி!

SCROLL FOR NEXT