சச்சின் போஸ்டர்.  படம்: எக்ஸ் / கலைப்புலி எஸ்.தாணு.
செய்திகள்

மறுவெளியீட்டில் சச்சின் 10 மடங்கு லாபம்! தயாரிப்பாளர் நெகிழ்ச்சி!

சச்சின் திரைப்படம் மறுவெளியீட்டில் லாபம் ஈட்டியுள்ளது குறித்து...

DIN

சச்சின் திரைப்படம் மறுவெளியீட்டில் லாபம் ஈட்டியுள்ளது குறித்து அதன் தயாரிப்பாளர் எஸ்.தாணு நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.

நடிகர் விஜய் நடித்த சச்சின் திரைப்படம் கடந்த ஏப்.18ஆம் தேதி மறுவெளியீடானது.

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் ஜான் மகேந்திரன் இயக்கி 2005-ஆம் ஆண்டு வெளியான சச்சின் திரைப்படத்தில் ஜெனிலியா, வடிவேலு, ரகுவரன் நடித்திருந்தனர். கலைப்புலி எஸ். தாணு தயாரித்திருந்தார்.

சந்திரமுகி படத்துடன் இணைந்து வெளியானதால் பெரிய வெற்றியைப் பெறாவிட்டாலும் ஓரளவு நல்ல வசூலை இப்படம் பெற்றது.

காதல், நகைச்சுவை என அனைவராலும் ரசிக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவான பாடல்களும் பெரிதும் கொண்டாடப்பட்டன.

இந்நிலையில் படம் ரூ.10 கோடிக்கும் அதிகமான வசூலித்துள்ளது. கில்லி திரைப்படம் ரூ.50 கோடி வசூலித்ததும் குறிப்பிடத்தக்கது. அந்தப் படத்தின் வசூலினை சச்சின் முறியடிக்குமா என விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில், இந்தப் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தானு கூறியதாவது:

தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் திரைகள் அதிகரித்து வருகின்றன. முதல் படத்தில் எனக்கு கௌரமான வசூல் கிடைத்தது. தற்போது இந்தப் படத்துக்கு 10 மடங்கு லாபம் கிடைத்துள்ளது.

சென்னையில் திரையரங்க உரிமையாளர் ஒருவர் இந்தப் படம் 50-இலிருந்து 100 நாள்கள் வரை ஓடும் எனக் கூறியுள்ளார். அப்போது படக்குழுவினை அழைத்து மரியாதை செலுத்த இருக்கிறோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டார்ஜிலிங்கில் கனமழையால் நிலச்சரிவு - புகைப்படங்கள்

மகளிர் உலகக்கோப்பை: பாக். எதிராகப் போராடி ரன் சேர்த்த இந்தியா! 248 ரன்கள் இலக்கு!

மழைநீர் வடிகால் பணிகளை நேரில் ஆய்வு செய்த முதல்வர்!

கண் ஜாடை... லட்சுமி பிரியா!

கண்கள் பேசும்... ஸ்ரவந்திகா!

SCROLL FOR NEXT