அமெரிக்க இயக்குநர் ஃபிரான்சிஸ் ஃபோர்ட் கொப்போலாவின் ’தி காட்ஃபாதர்’ படத்தின் மூன்று பாகங்களும் இந்தியா முழுவதும் 4கே தொழில்நுட்பத்தில் மறுவெளியீடாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பை பிவிஆர் ஐநாக்ஸ் அறிவித்துள்ளது.
மிகவும் புகழ்பெற்ற தி காட்ஃபாதர் (1972), தி காட்ஃபாதர் - 2 (1974), தி காட்ஃபாதர் - 3 (1990) திரைப்படங்கள் குறிப்பிட்ட சில திரையரங்குகளில் மட்டும் செப்.12-இல் முதல்கட்டமாகவும் அடுத்தடுத்த பாகங்கள் முறையே அக்.17, நவ.14ஆம் தேதிகளிலும் வெளியாகவிருக்கிறது.
மரியோ பாஸோ எழுதிய நாவலின் அடிப்படையாக வைத்து இந்த மூன்று பாகங்களும் உருவாகின. மர்லான் பிராண்டோ, அல்பசினோ நடிப்பின் உச்சம் தொட்ட படங்களாக இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.
உலக சினிமாவின் அஸ்திவாரம் என அழைக்கப்படும் இந்தப் படங்களை மையமாக வைத்து பல திரைப்படங்கள் உருவாகியுள்ளன.
இந்தப் பொன்னான வாய்ப்பினை சினிமா ரசிகர்கள் தவறவிடாதீர்கள் என பிவிஆர் கூறியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.