பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!
பராசக்தி படத்தின் படப்பிடிப்பு தளத்தை இலவசமாக பார்ப்பது குறித்து...
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி படத்தின் படப்பிடிப்பு பொருள்காட்சியை இலவசமாக ரசிகர்கள் கண்டுகளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கலை முன்னிட்டு வரும் ஜன.14ஆம் தேதி இந்தப் படம் திரைக்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் சுதா கொங்காரா கூட்டணியில் பராசக்தி என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.
Advertisement
Advertisement
இந்தப் படத்தில் ரவி மோகன், அதர்வா மற்றும் ஸ்ரீ லீலா உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மொழிப்போர் காலங்களில் மதராஸ் மாகாணத்தில் நடைபெற்ற ஹிந்தி திணிப்பு போராட்டத்தை மையப்படுத்தி உருவாகியுள்ளது.
பழைய காலத்துக்கான பொருள்கள் அடங்கிய பராசக்தி கண்காட்சியை ரசிகர்கள் சென்னையில் உள்ள வல்லுவர் கோட்டத்தில் மதியம் 2 முதல் இரவு 10 மணிவரை இலவசமாக பார்வையிடலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
It has been announced that fans can enjoy the exhibition of props from the film 'Parasakthi', starring actor Sivakarthikeyan, free of charge.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.