துரோகம் செய்வது நன்றாகத் தெரியும்: செல்வராகவன்
இயக்குநர் செல்வராகவன் புதிய பதிவு...
இயக்குநர் செல்வராகவனின் பதிவு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில், இயக்குநர் செல்வராகவனுடனான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமிலிருந்து அவரது மனைவி கீதாஞ்சலி நீக்கியது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இதற்கு முன், நேர்காணல் ஒன்றில் பேசிய செல்வராகவன், ‘அடுத்த 6 மாதத்தில் நான் சந்திக்கப்போகும் பெரிய பிரச்னை வரப்போகிறது’ எனக் கூறியிருந்தார். அதனையும் இதனையும் தொடர்புபடுத்தி செல்வராகவனுக்கு விவாகரத்தா? என ரசிகர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர். அதேநேரம், செல்வராகவன் தன் மனைவியுடான புகைப்படங்களை எதையும் நீக்கவில்லை.
Advertisement
Advertisement
இந்த நிலையில், செல்வராகவன் புதிய பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “திடீரென உங்களுக்கு அனைத்தும் தவறாய் போகும். சுற்றியுள்ளவர்கள் அனைவரும் துரோகம் செய்வது நன்றாய் தெரியும். நீயெல்லாம் கடவுளா ? உனக்கு எவ்வளவு பூஜை செய்து வழிபட்டேன் என பிதற்றுவீர்கள். அப்போது அமைதியாய் இருங்கள். சில காலம்தான். பெரும் மலை பனியாய் போகும். அனைத்தும் சரியாகி விடும்." எனக் கூறியுள்ளார்.
இதனால், இருவருக்கும் இடையே பிரச்னை என்பதைப் புரிந்துகொண்ட ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
director selvaraghavan new post about treason
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.