முகப்பு
செய்திகள்

கைவிடப்பட்ட சிவகார்த்திகேயன் - சிபி சக்ரவர்த்தி திரைப்படம்?

சிவகார்த்திகேயன் - சிபி சக்ரவர்த்தி திரைப்படம் குறித்து...

Updated On : 22 டிசம்பர் 2025, 3:09 pm IST
சிவகார்த்திகேயன் - சிபி சக்ரவர்த்தி
பகிர்:

சிவகார்த்திகேயன் - சிபி சக்ரவர்த்தி திரைப்படம் இன்னும் துவங்காமல் இருக்கிறது.

அமரன், மதராஸி திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இப்படம் பீரியட் அரசியல் கதையாக எடுக்கப்பட்டு வருவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முக்கியமாக, இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகி வருவதால் நிச்சயம் ஏமாற்றம் ஏற்படாது என பலரும் நம்புகின்றனர்.

Advertisement

Advertisement

இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், சிவகார்த்திகேயன் அடுத்ததாக டான் படத்தின் இயக்குநர் சிபி சக்ரவர்த்தியின் புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

இதன் படப்பிடிப்பு நவம்பர் முதல் வாரத்தில் துவங்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிவகார்த்திகேயன் இப்படத்தைவிட்டு இயக்குநர் வெங்கட் பிரபு திரைப்படத்திற்கு கால்ஷீட் கொடுத்துள்ளாராம். இது ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

திரைக்கதை தாமததால் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டதா இல்லை இருவருக்கும் இடையே ஏதேனும் கருத்து வேறுபாடா எனவும் கேள்விகள் எழுந்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.