மனைவி சான்ட்ராவுக்காக நடிகர் ப்ரஜின் ஒட்டுமொத்த பிக் பாஸ் போட்டியாளர்களையும் விமர்சித்துள்ளார்.
சான்ட்ரா தனது கடந்து வந்த பாதை குறித்து பேசியது பலருக்கு நடிப்பதைப்போன்று தெரிந்ததாகவும், சுபிக்ஷாவும் ஆதிரையும் சான்ட்ரா பேசிக்கொண்டிருக்கும்போதே ஓய்வறைக்குச் சென்று சிரித்து பேசியது மிகவும் கீழ்த்தரமான செயல் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 12 வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரத்துக்கான கேப்டனாக கமருதீன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு முந்தைய வாரங்களில் போட்டியாளர்கள் தாங்கள் கடந்து வந்த பாதை குறித்து விவரித்தனர்.
அந்தவகையில் வைல்டு கார்டு மூலம் உள்ளே நுழைந்தவர்களுக்கு தாங்கள் கடந்து வந்த பாதை குறித்து விவரிக்க வாய்ப்பளிக்கப்பட்டது. இதில், நடிகை சான்ட்ரா, தான் கடந்து வந்த பாதை குறித்து உருக்கமாக விவரித்தார்.
ஆனால், சான்ட்ராவின் மீதான பிம்பம் பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவருக்கும் மாறியுள்ளதால், பலரும் அதனை நடிப்பெனக் கருதி ரகசியமாகச் சிரித்தனர். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ள நடிகர் ப்ரஜின், தனது மனைவியிடம் பிக் பாஸ் போட்டியாளர்கள் நடந்துகொண்ட விதம் குறித்து விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக பிக் பாஸ் வீட்டில் தற்போது உள்ள போட்டியாளர்களை கடுமையாக விமர்சித்துள்ளார். கடந்து வந்த பாதை குறித்து சான்ட்ரா விவரித்துக்கொண்டிருந்தபோது, ஆதிரையும் அரோராவும் ஓய்வறைக்குச் சென்று எதையோ கூறி சிரிக்கின்றனர்.
இதோடு மட்டுமின்றி கானா வினோத், விக்ரம், கனி திரு என அனைவரும் இரவில் ஒன்றாக அமர்ந்துகொண்டு சான்ட்ரா கூறியதை கிசிகிசுப்பாக பேசிக்கொண்டு சிரிக்கின்றனர். இதைவிட கேவலமாக யாராலும் நடந்துகொள்ள முடியாது எனக் குறிப்பிட்டார்.
எனினும் ரசிகர்கள் பலரும் ப்ரஜினின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்து வருகின்றனர். சான்ட்ரா கடந்து வந்த பாதையை குறித்து விமர்சித்துப் பேசவில்லை என்றும், அவர் கதை கூறிக்கொண்டிருக்கும்போது விக்கல்ஸ் விக்ரம் தூங்கிவிட்டதை குறிப்பிட்டே பேசிக்கொண்டு சிரித்ததாகவும் விளக்கம் அளித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.