ஸ்வீட்ஹார்ட் பாடலில் இருந்து ரியோ ராஜ். 
செய்திகள்

யுவன் இசையில் வித்தியாசமான கானா பாடல்..!

ரியோ ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ஸ்வீட்ஹார்ட் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

DIN

யுவன் இசையில் ரியோ ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ஸ்வீட்ஹார்ட் படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகியுள்ளது.

யுவன் சங்கர் ராஜா இசையமைப்பதுடன் திரைப்படத் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் பியார் பிரேம காதல், ஹை ஆன் லவ், விஜய் சேதுபதி நடித்த மாமனிதன் உள்ளிட்ட படங்களைத் தயாரித்துள்ளார்.

பியார் பிரேம காதல் படத்தைத் தவிர மற்ற படங்கள் வணிக ரீதியான வெற்றியைப் பெறவில்லை என்றாலும் தயாரித்த அனைத்து படங்களும் ரசிக்கக்கூடிய வகையிலேயே உருவாகியிருந்தன.

நாயகனாக நடிகர் ரியோ ராஜ் நடிக்க அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கியுள்ளார். படத்திற்கு, ‘ஸ்வீட்ஹார்ட்’ எனப் பெயரிட்டுள்ளனர்.

காதல் திரைப்படமாக உருவாகும் இதில் கோபிகா ரமேஷ் நாயகியாகவும் ரெடின் கிங்ஸ்லி, அருணாச்சலம், சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் அவ்ஸம் கிஸா எனும் லிரிக்கல் விடியோ வெளியாகியுள்ளது.

பிரபல கானா பாடகர் ஆஃப்ரோ யுவனுடன் இணைந்து பாடியுள்ளார். கெழிதி, கானா பிரான்சிஸ் இணைந்து இந்தப் பாடலை எழுதியுள்ளார்கள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆசிய கோப்பை ஹாக்கி: இறுதிச்சுற்றில் இந்தியா! சீனா படுதோல்வி!

திருவள்ளுவர் சிலைக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

பின்லேடனுக்காக அனுப்பப்பட்ட அதே குழுதான் வடகொரியாவுக்கும்? 2019-ல் அமெரிக்காவின் செயல்!

பாஜக கூட்டணியிலிருந்து டிடிவி தினகரன் வெளியேற யார் காரணம்? - நயினார் நாகேந்திரன் சொல்வதென்ன?

இந்துஜா குழுமம் ரூ.7,500 கோடி முதலீடு: முதல்வா் முன்னிலையில் ஒப்பந்தம்

SCROLL FOR NEXT