‘தல வந்தா தள்ளிப்போகணும்...’ டிராகன் வெளியீட்டுத் தேதி மாற்றம்!
டிராகன் வெளியீட்டுத் தேதியில் மாற்றம்...
பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் படத்தின் வெளியீட்டுத் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
ஏஜிஎஸ் கல்பாத்தி நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவான திரைப்படம் டிராகன். லவ் டுடே மூலம் பிரபலமடைந்த பிரதீப் ரங்கநாதன் இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.
முழுக்க முழுக்க கல்லூரி காதல் கதையாக உருவான இதில் நாயகியாக அனுபமா பரமேஸ்வரனும் இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், கே. எஸ். ரவிக்குமார் ஆகியோர் பிரதான வேடங்களி்லும் நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: விடாமுயற்சி - வித்தியாசமான தோற்றத்தில் அஜித்?
டிராகன் திரைப்படம் காதலர் தினத்தையொட்டி பிப். 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நடிகர் அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்படம் பிப். 6 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால் டிராகன் படத்தை பிப். 21-க்கு ஒத்திவைத்துள்ளனர்.
மறுவெளியீட்டுத் தேதியை அறிவித்த பிரதீப் ரங்கநாதன், “தல வந்தா தள்ளிப் போய்தான ஆகணும்” எனப் பதிவிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.