கூலி திரைப்படத்தின் இரண்டாவது பாடலான மோனிகா பாடல் வெளியானது.
கூலி திரைப்படம் இந்தியளவில் பெரிய வணிக வெற்றியைப் பெறலாம் என கணிக்கப்பட்டுள்ளதால் ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தங்கக் கடத்தலை முதன்மைக் கதையாக வைத்து இப்படம் முழுநீள ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. முக்கியமான சண்டைக் காட்சியொன்று தாய்லாந்திலும் படமாக்கப்பட்டுள்ளது.
கூலி திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா ஜூலை 27 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், அனிருத் இசையமைப்பில் விஷ்ணு எடவன் எழுதிய இப்படத்தின் இரண்டாவது பாடலான மோனிகா பாடல் வெளியாகியுள்ளது. இதில், நடிகை பூஜா ஹெக்டே சிறப்பு நடனமாடியுள்ளார். இது ரசிகர்களிடம் கவனம் ஈர்த்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.