துல்கர் சல்மான் 
செய்திகள்

தியாகராஜ பாகவதராக துல்கர் சல்மான்! ஆர்வமூட்டும் டீசர் முன்னோட்டம்!

காந்தா டீசர் அறிவிப்பு குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

காந்தா திரைப்படத்தின் டீசர் அறிவிப்புக்கான முன்னோட்ட விடியோ ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்னிந்திய பிரபலமான நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகிவரும் காந்தா திரைப்படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வருகிறது.

தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் நடிகரான எம். கே. தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமாக இது உருவாகியுள்ளது.

செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் காந்தா திரைப்படத்தில் நாயகியாக பாக்யஸ்ரீ போர்ஸும் முக்கிய கதாபாத்திரங்களில் சமுத்திரக்கனி, ராணா டக்குபதி ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், இப்படத்தின் டீசர் நடிகர் துல்கர் சல்மானின் பிறந்த நாளை முன்னிட்டு நாளை (ஜூலை 28) மாலை 3 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான முன்னோட்ட விடியோவில் கருப்பு வெள்ளை பின்னணியில் துல்கர் சல்மான் சிரிக்கும் விடியோ படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.

actor dulquer salmaan's kaantha movie teaser announcement video get good response

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குல்தீப் யாதவ் பந்துவீச்சைக் கணிக்க முடியாது: முன்னாள் பாகிஸ்தான் வீரர்!

1000 ஆண்டுகளுக்கு முந்தைய கதையைப் பேசும் காந்தாரா - 1!

ஆரோமலே அறிமுக விடியோ!

ஆங்கிலப் பெயர் பலகைகளை அடித்து நொறுக்கிய தமிழ் உரிமை இயக்கத்தினர்!

குடியரசுத் தலைவரின் 14 கேள்விகள்: தீர்ப்பு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT