செய்திகள்

என்றும் உங்கள் நண்பன்... மணிரத்னத்தை வாழ்த்திய கமல்ஹாசன்!

இயக்குநர் மணிரத்னம் பிறந்த நாளுக்கு கமல் வாழ்த்து...

DIN

இயக்குநர் மணிரத்னம் பிறந்த நாளுக்கு கமல் ஹாசன் தன் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல் ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவான தக் லைஃப் திரைப்படம் ஜூன் 5 ஆம் தேதி திரைக்கு வருகிறது. படத்தின் டிரைலர், பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும், இன்று மணிரத்னத்தின் பிறந்த நாள் என்பதால் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் கமல்ஹாசனும் தன் வாழ்த்துப் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ”திரைத்துறையினராக, குடும்பத்தினராக, இணை கனவுகொண்டவர்களாக எல்லாவற்றையும் தாண்டி சினிமாவின் மாணவர்களாக நாயகனிலிருந்து தல் லைஃப் வரை நாம் ஒருமித்து பயணித்தோம்.

நம்முடைய ஒவ்வொரு அத்தியாயத்திலும், உங்கள் இருப்பு எனக்கு பலமாகவே இருந்தது. உங்களின் பார்வை சினிமாவிற்கு ஆழத்தையும் அழகையும் பொருளையும் தருவதால் உங்களுடைய கதைகள் தொடர்ந்து விரியட்டும். நான் என்றென்றும் உங்கள் நண்பன்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திட்டமிட்டபடி 13ஆம் தேதி விஜய்யின் சுற்றுப்பயணம் கண்டிப்பாக நடைபெறும்! - நிர்மல் குமார் | TVK

கேரளத்தில் அமீபா தொற்றால் பாதிக்கப்பட்ட இரு குழந்தைகள் குணமடைந்து வீடு திரும்பினர்!

விஜயகாந்த் சகோதரி காலமானார்

காத்மாண்டு விமானங்களை ரத்து செய்தது ஏர் இந்தியா!

17 வயது சிறுவனின் காதல் கோரிக்கைக்கு சீரியல் நடிகை அளித்த பதில்!

SCROLL FOR NEXT