முகப்பு
செய்திகள்

அட்லி - அல்லு அர்ஜுன் படத்தில் சமந்தா?

அட்லி படத்தில் சமந்தா...

Updated On : 7 ஜூன், 2025 at 9:23 PM
பகிர்:
Updated On : 7 ஜூன், 2025 at 9:16 PM

இயக்குநர் அட்லி - அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் படத்தின் நடிகை சமந்தா இணையவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புஷ்பா - 2 படத்தின் இமாலய வெற்றிக்குப் பின் நடிகர் அல்லு அர்ஜுன் இயக்குநர் அட்லி திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படம் ரூ. 600 கோடி பட்ஜெட்டில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகிறது.

படத்தின் கதை முழுக் கற்பனை (fantacy) புனைகதையாக இருக்கும் எனத் தெரிகிறது. இப்படத்தில் நடிகை தீபிகா படுகோன் இணைந்ததை இன்று விடியோ வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

Advertisement

Updated On : 7 ஜூன், 2025 at 9:17 PM

இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் தீபிகா படுகோனின் அறிவிப்பு விடியோவை பகிர்ந்த சமந்தா, “ஆமாம். ராணிதான்” எனப் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, சமந்தா இப்படத்தில் இணையலாம் எனத் தகவல்கள் வெளியான நிலையில் இப்பதிவு அதை உறுதிபடுத்தியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.