நடிகர் தனுஷ் தொடர்ந்து வசூலைக் குவித்து வருகிறார்.
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக இருக்கிறார். 20 ஆண்டுகளாக சினிமாவிலிருப்பவர் இளம் வயதிலேயே 50 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார். அதிலும் கடந்த சில ஆண்டுகளாக தனுஷ் படங்கள் மீது ரசிகர்களுக்கும் எதிர்பார்ப்பு இருக்கிறது.
முக்கியமாக, 2022-ல் திருச்சிற்றம்பலம் படத்தின் மூலம் தன் முதல் ரூ. 100 கோடி படத்தைக் கொடுத்த தனுஷ் அடுத்தடுத்த ஆண்டுகளில் வாத்தி (ரூ.118 கோடி), ராயன் (ரூ.156 கோடி) படங்களின் மூலம் தன்னை வணிக ரீதியாகவும் பலப்படுத்திக்கொண்டார்.
தற்போது, குபேரா படமும் உலகளவில் ரூ. 100 கோடியைக் கடந்துள்ளது. இதனால், கேப்டன் மில்லர் (ரூ. 85 கோடி) படத்தைத் தவிர கடந்த 4 ஆண்டுகளில் 4 ரூ.100 கோடி பாக்ஸ் ஆஃபிஸ் படங்களை தனுஷ் கொடுத்துள்ளது அவரது ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: நான் திரைப்படங்களை இயக்குவதை நிறுத்தியதற்கு இதுதான் காரணம்: லால்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.