ஸ்வீட்ஹார்ட் பாடல் ப்ரோமோ விடியோ வெளியீடு 
செய்திகள்

ஸ்வீட்ஹார்ட் படத்தின் புதிய பாடல் ப்ரோமோ விடியோ!

’டார்ச்சர் ப்ரோ மேக்ஸ்’ பாடல் ப்ரோமோ விடியோ வெளியானது.

DIN

யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ரியோ நடிக்கும் ஸ்வீட்ஹார்ட் படத்தின் பாடல் ப்ரோமோ விடியோ வெளியாகியுள்ளது.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பியார் பிரேம காதல், ஹை ஆன் லவ், மாமனிதன் போன்ற திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். இதில், பியார் பிரேமா காதல் படத்தைத் தவிர மற்ற படங்கள் வணிக ரீதியான வெற்றியைப் பெறவில்லை.

தற்போது, யுவனின் ஒய்எஸ்ஆர் நிறுவனம் நடிகர் ரியோ ராஜ் நடிக்கும் ஸ்வீட்ஹார்ட் படத்தை தயாரித்துள்ளது. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கியுள்ளார். யுவன் இசையமைத்துள்ளார்.

காதல் திரைப்படமாக உருவாகும் இதில் கோபிகா ரமேஷ் நாயகியாகவும் ரெடின் கிங்ஸ்லி, அருணாச்சலம், சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், ஸ்வீட் ஹார்ட் படத்தின் புதிய பாடல் ப்ரோமொ விடியோ இன்று வெளியாகியுள்ளது.

டார்ச்சர் ப்ரோ மேக்ஸ் எனப்படும் இந்தப் பாடலை அறிவு எழுதியுள்ளார். யுவன், அறிவு, தன்வி ஷா இணைந்து பாடியுள்ளனர்.

இப்படம் மார்ச் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தில் மகா கும்பாபிஷேகம்

மதுரையில் இன்று தவெக 2-ஆவது மாநில மாநாடு: அரங்கைப் பாா்வையிட்டாா் விஜய்

வெற்றி பெறுமா விஜயின் வியூகம்...?

காா் மீது லாரி மோதல்: பாஜக மாவட்ட தலைவா் உள்பட 4 போ் காயம்

திருச்சியில் உலா் துறைமுகம்: மத்திய அமைச்சா்களிடம் துரை வைகோ எம்.பி. வலியுறுத்தல்

SCROLL FOR NEXT