நடிகை சமந்தா.  படங்கள்: இன்ஸ்டா / சமந்தா
செய்திகள்

சமந்தா தயாரிப்பில் முதல் திரைப்படம்..!

நடிகை சமந்தா தயாரிப்பில் முதல் படம் வெளியீடு குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

DIN

நடிகை சமந்தா தயாரிப்பில் முதல் படம் வெளியீடு குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சமந்தா நடிகையாக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார்.

ட்ரலாலா மூவிங் ஃபிக்சர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தை கடந்த 2023இல் சமந்தா தொடங்கினார்.

இந்தத் தயாரிப்பில் முதல் படமாக ‘சுபம்’ என்ற திரைப்படம் வெளியாகவிருக்கிறது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் பிரபல நடிகையாக இருக்கும் சமந்தா சமீபத்தில் மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்துள்ளார்.

நடிகை சமந்தா கடைசியாக குஷி படத்தில் நடித்திருந்தார். தற்போது, மா இன்டி பங்காரம் படத்தில் நடித்து வருகிறார். சிட்டாடல் இணையத்தொடர் ஓடிடியில் வெளியானது.

ஜிக்ரா புரமோஷன் நிகழ்வில் ஆலியா பட் சமந்தாவை இந்தியாவின் முக்கியமான நடிகை என மிகவும் புகழ்ந்து பேசியது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படம் தினமும் நடைபெறும் நிகழ்வுகள் குறித்து நகைச்சுவை, த்ரில்லர் கலந்த பாணியில் உருவாகியுள்ளது.

37 வயதாகும் சமந்தா தனது தயாரிப்பு நிறுவனத்தை 2023ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தினார். ஆனால், தற்போதுதான் முதல் படம் வெளியாகவிருக்கிறது.

இந்தப் படத்தை வசந்த் மரிகாந்தி எழுத, பிரவீன் கேண்ட்ரெகுலா இயக்கியுள்ளார். இதில் ஹர்ஷித் மல்கிரெட்டி, கண்ஷ்ரியா கோந்தம், ஷாலினி கொண்டேபுடி, ஷ்ராவனி நடித்துள்ளார்கள்.

இந்தப் படத்தை ரசிகர்கள் பார்க்க ஆவலுடன் காத்திருப்பதாகக் கூறியுள்ளார் சமந்தா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் இரட்டை மாடி பேருந்துகள் இயக்க நடவடிக்கை

விதி மீறல்: 31 பட்டாசு ஆலைகளுக்கு குறிப்பாணை

பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டவா் 5 ஆண்டுகளுக்கு பிறகு கைது

ஹான்ஸ் பாக்கெட்டுகள் விற்றவா் கைது

வீட்டில் தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT