ஜாய் கிரிசில்டாவை இரண்டாவது திருமணம் செய்ததாக மாதம்பட்டி ரங்கராஜ் ஒப்புக்கொண்ட நிலையில், அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு மகளிர் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்துவிட்டு, மோசடி செய்ததாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா புகார் அளித்த நிலையில், அவருக்குக் கடந்த வாரம் ஆண்குழந்தையும் பிறந்தது.
ஜாய் கிரிசில்டாவின் புகாரை மாநில மகளிர் ஆணையம் விசாரித்த நிலையில், அவரைத் தான் திருமணம் செய்ததாகவும், அவரது குழந்தையின் தந்தை என்றும் மகளிர் ஆணையத்தின் விசாரணை முன்பாக மாதம்பட்டி ரங்கராஜ் ஒப்புக் கொண்டார்.
இந்த நிலையில்தான், மாதம்பட்டி ரங்கராஜ் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று காவல்துறை ஆணையருக்கும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு ஆணையத்தைப் பரிந்துரைத்து மகளிர் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.
அதுமட்டுமின்றி, வழக்கு முடியும்வரையில் குழந்தையின் பராமரிப்புச் செலவையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிக்க: ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் கடும் மோதல்! உருட்டுக்கட்டைகளால் தாக்குதல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.