ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் எப்போது? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் வெளியீடு குறித்து...
நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் எப்போது வெளியாகும் என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இயக்குநர் எச். வினோத் நடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தின் எடிட்டிங் பணிகள் வரை முடிவடைந்ததுள்ளதால் உறுதியாக பொங்கல் வெளியீடாக அடுத்தாண்டு ஜன. 9 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
இதில், நாயகியாக பூஜா ஹெக்டேவும் முக்கிய கதாபாத்திரத்தில் மமிதா பைஜூவும் நடித்துள்ளனர். இப்படத்தை கேவிஎன் ப்ரொடக்ஷன் தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார்.
Advertisement
Advertisement
அனிருத் இசையமைப்பில் உருவான முதல் பாடல் தீபாவளியன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கரூர் சம்பவத்தால் அது ஒத்திவைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில், ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் வரும் நவ. 8 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முன்னதாக, ஜனநாயகன் படத்தின் புதிய போஸ்டர் வெளியானது குறிப்பிடத்தக்கது. இப்படம் விஜய்யின் கடைசி படம் என்பதால், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிக்க: தொடரும் ஹார்ட் பீட் - 3! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!
An official announcement has been made regarding the release date of the first song from actor Vijay's film Jananayagan.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.