முகப்பு
செய்திகள்

குறுகிய காலத்தில் முடிவடையும் பிரபல தொடர்!

மனசெல்லாம் தொடர் குறுகிய காலத்தில் முடிவடையவுள்ளது தொடர்பாக...

Updated On : 17 நவம்பர் 2025, 1:09 pm IST
மனசெல்லாம் தொடரின் காட்சி
பகிர்:

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மனசெல்லாம் தொடர் விரைவில் முடிவடையவுள்ளது.

அதிக டிஆர்பி பெறும் தொடர்களின் பட்டியலில் மனசெல்லாம் தொடரும் உள்ளது. இந்தத் தொடர் 250 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.

மனசெல்லாம் தொடரின் பிரதான பாத்திரங்களில் சுரேந்தர், தீபக் குமார், வெண்பா, பரமேஸ்வரி ரெட்டி உள்ளிட்டோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Advertisement

Advertisement

இந்தத் தொடர், திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

காதலித்த இரு ஜோடிகள் குடும்ப சூழல் காரணமாக மாறி மாறி திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்குப் பிறகு அவர்களின் நிலை என்ன? குடும்பத்தின் கட்டாயத் திருமணத்தால் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை மையப்படுத்தி கதை நகர்கிறது.

இதனிடையே, மனசெல்லாம் தொடரை முடிக்க தொடர் குழு முடிவெடுத்துள்ளது. இந்தத் தொடரின் இறுதிக்கட்ட காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளன.

மனசெல்லாம் தொடர் ஆரம்பிக்கப்பட்டு ஒரு ஆண்டுகூட நிறைவடையாத நிலையில், தொடர் முடிவடையவுள்ளது ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

manasellam serial end soon.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments