சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள மை லார்ட் படத்தின் முதல் பாடல் நாளை (நவ.19) வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாடலை சின்மயி, சத்யபிரகாஷ் இணைந்து பாடியுள்ளார்கள்.
ஒலிம்பியா மூவிஸ் தயாரித்துள்ள மை லார்ட் திரைப்படத்தினை இயக்குநர் ராஜு முருகன் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக கன்னட நடிகை சைத்ரா ஜே ஆச்சர் நடித்துள்ளார். குரு சோகசுந்தரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஷான் ரோல்டன் இசையில் யுகபாரதி பாடல் வரிகளில் சின்மயி, சத்யபிரகாஷ் இணைந்து பாடியுள்ள ’எச காத்தா..’ எனும் பாடல் நாளை வெளியாக இருக்கிறது.
டூரிஸ்ட் ஃபேமலி படத்தின் வெற்றிக்குப் பிறகு சசிகுமாரின் படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.