செய்திகள்

துடரும் இயக்குநரின் புதிய படம் ஆபரேஷன் கம்போடியா!

நடிகர் பிருத்விராஜ் சுகுமாறனின் புதிய திரைப்படம் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் பிருத்விராஜ் சுகுமாறன் - இயக்குநர் தருண் மூர்த்தி ஆகியோரது கூட்டணியில் உருவாகும் புதிய படத்துக்கு ‘ஆபரேஷன் கம்போடியா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

நடிகர் மோகன் லாலின் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த, துடரும் திரைப்படத்தை இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கியிருந்தார். இந்தப் படம், ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்து வெற்றியடைந்தது.

இந்த நிலையில், இயக்குநர் தருண் மூர்த்தியின் முதல் திரைப்படமான, ஆபரேஷன் ஜாவாவின் இரண்டாவது பாகம் ஆபரேஷன் கம்போடியா எனும் பெயரில் உருவாகின்றது.

இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜோய்யின் இசையில் உருவாகும் இப்படத்தில், நடிகர்கள் பிருத்விராஜ் சுகுமாறன், லுக்மான் அவாரன், பாலு வர்கீஸ், இர்ஷாத் அலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

முன்னதாக, 2021 ஆம் ஆண்டு வெளியான ஆபரேஷன் ஜாவா திரைப்படம், கேரளத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியிருந்தது. இதனால், அதன் 2 ஆம் பாகமான ஆபரேஷன் கம்போடியா திரைப்படமும் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: பைசன் காளமாடன்: மாரி செல்வராஜின் வரிகளில் புதிய பாடல்!

The new film, by actor Prithviraj Sukumaran and director Tarun Moorthy, has been titled 'Operation Cambodia'.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கஞ்சா கடத்திய 2 போ் சிறையில் அடைப்பு

இணையவழியில் முதலீடு ஆசை காட்டி ரூ.78 லட்சம் மோசடி

இடைக்காட்டூா் திரு இருதய ஆண்டவா் தேவாலயத்தில் சீரமைப்புப் பணிகள்: முதல்வா் ஆய்வு

மின்சாரம் பாய்ந்ததில் கூலித் தொழிலாளி உயிரிழப்பு

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

SCROLL FOR NEXT