திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா மற்றும் நடிகர் என பன்முகத் திறமை கொண்ட அஜயன் பாலா மைலாஞசி என்ற படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்.
இந்தப் படத்தின் இசை, டீசர் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இப்படத்திற்கு சிம்பொனி செல்வன் இசைஞானி இளையராஜா பாடல்களை எழுதி இசையமைக்க இயக்குநர் வெற்றிமாறன் வழங்குகிறார்.
மலைப் பிரதேசத்தின் பின்னணியில் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை பேசும் காதல் கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது.
அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
செழியன் ஒளிப்பதிவில், ஶ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகும் இந்தப் படத்தில் ஸ்ரீராம் கார்த்திக் நாயகனாகவும் , கிரிஷா குரூப் நாயகியாகவும் நடித்துள்ளார்கள்.
இவர்களுடன் யோகி பாபு, முனீஷ்காந்த், சிங்கம்புலி மற்றும் தங்கதுரை உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த இசை வெளியீட்டு விழாவில் திருமதி அகிலா பாலுமகேந்திரா, இசைக்கலைஞர் கங்கை அமரன் ஆகியோர் இசை, டீசரை வெளியிட்டார்கள்.
சிறப்பு விருந்தினர்களாகப் படக்குழுவினருடன் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர்கள் ஆர். வி. உதயகுமார், பேரரசு, ஏ. எல். விஜய், மீரா கதிரவன், காவல்துறை உயரதிகாரி தினகரன் (ஏடிஜிபி) ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
இந்தப் படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.