லிஜோ ஜோஸ் பெல்லிசரி படத்திற்கு இசையமைக்கும் ஏ. ஆர். ரஹ்மான்!
ஏ. ஆர். ரஹ்மான் - லிஜோ கூட்டணியில் புதிய படம்...
இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசரி இயக்கும் படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.
புதிய தலைமுறை மலையாள சினிமாவின் போக்கை மாற்றிய இயக்குநர்களில் ஒருவராக லிஜோ ஜோஸ் கருதப்படுகிறார். அவர் இயக்கிய, அங்கமாலி டயரிஸ், ஜல்லிக்கட்டு, சுருளி, நண்பகல் நேரத்து மயக்கம் ஆகிய படங்கள் பெரிய வரவேற்பைப் பெற்றவை.
இறுதியாக, நடிகர் மோகன்லாலை வைத்து இயக்கிய மலைக்கோட்டை வாலிபன் உருவாக்க ரீதியாக பாராட்டுகளைப் பெற்றாலும் கலவையான விமர்சனங்களைப் பெற்று வணிக ரீதியாக தோல்விப்படமானது.
தற்போது, லிஜோ ஜோஸ் காதல் திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளார்.
இந்த நிலையில், இப்படத்தை ஹன்சல் மேத்தா தயாரிக்க உள்ளதாகவும் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்க உள்ளதாகவும் லிஜோ ஜோஸ் பெல்லிசரி அறிவித்துள்ளார்.
இது ரசிகர்களிடம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.