பாடலாசிரியர் சினேகனின் தந்தை காலமானார்!
பாடலாசிரியர் சினேகனின் தந்தை சிவசங்கு மறைவு குறித்து.
திரைப்பட பாடலாசிரியர் சினேகனின் தந்தை சிவசங்கு, வயது மூப்பின் காரணமாக இன்று(அக். 27) காலமானார். அவருக்கு வயது 102.
தஞ்சாவூர் மாவட்டம் புது காரியாபட்டியில் உள்ள அவரது வீட்டில் வசித்துவந்த சிவசங்கு, இன்று அதிகாலை காலமானார். அவரது உடல் நாளை காலை 11 மணிக்கு புது காரியாபட்டியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
சினேகனின் தந்தை சிவசங்கு மறைவுக்கு திரைவுலகினர், அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement
இது குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தன்னுடைய இரங்கல் பதிவில், ”என்னுடைய அன்புக்குரிய தம்பியும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில இளைஞரணிச் செயலாளருமான கவிஞர் சினேகனின் தந்தையார் சிவசங்கு மறைந்த செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன்.
தம்பி சினேகனுக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Film lyricist Snehan's father, Sivasangu, passed away today (Oct. 27) due to old age.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.