மீண்டும் இணையும் இருமுகன் கூட்டணி! விக்ரம் - 63 பட அறிவிப்பு!
நடிகர் விக்ரமின் 63 ஆவது திரைப்படம் குறித்து...
நடிகர் விக்ரம் நாயகனாக நடிக்கும் 63 ஆவது திரைப்படத்தின் அறிவிப்பு விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் கடந்த 2025 ஆம் ஆண்டு வெளியான “வீர தீர சூரன்” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தைத் தொடர்ந்து, நடிகர் விக்ரமின் புதிய படத்தின் அறிவிப்புக்காக அவரது ரசிகர்கள் நீண்டகாலமாகக் காத்திருந்தனர்.
இந்த நிலையில், 2016 ஆம் ஆண்டு வெளியான “இருமுகன்” பட இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விக்ரமின் 63 ஆவது படம் உருவாகுவதாகப் படக்குழுவினர் இன்று (ஏப். 17) அறிவித்துள்ளனர்.
Advertisement
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகும் இப்படத்தை பிரபல தயாரிப்பாளர்களான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. இதையடுத்து, இப்படத்தின் அறிவிப்பு விடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இத்துடன், சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குநர் ஆனந்த் ஷங்கர் மற்றும் நடிகர் விக்ரமின் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் அவர்களது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.