கருப்பு இசை வெளியீட்டு விழா தேதி!
கருப்பு இசைவெளியீட்டு விழா குறித்து...
கருப்பு திரைப்படத்தின் இசைவெளியீட்டுத் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஆர்ஜே பாலாஜி - நடிகர் சூர்யா கூட்டணியில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே மே. 14 ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் “கருப்பு”. இப்படத்தின் 3 பாடல்கள் கவனம் ஈர்த்துள்ளதால் சூர்யாவின் பக்கா கமர்சியல் படமாக இது இருக்கும் என அவரின் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
மேலும், கருப்பு திரைப்படம் படையப்பா, கில்லி போல் இருக்குமென இயக்குநர் ஆர்ஜே பாலாஜி கூறியிருந்தது எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற ஏப். 26 ஆம் தேதி மதுரையிலுள்ள தனியார் கல்லூரியில் நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அன்றைய நாளில் படத்தின் டிரைலரும் வெளியாகலாம் என்பதால் சூர்யா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இப்படத்தைத் தொடர்ந்து சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் வெளியாகவுள்ளது.
The audio release date for the film Karuppu has been announced.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.