கருப்பு ஓடிடி தேதி!
கருப்பு ஓடிடி தேதி குறித்து...
நடிகர் சூர்யாவின் கருப்பு ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படம் மே. 15 ஆம் தேதி வெளியாகி அபாரமான வரவேற்பைப் பெற்று ரூ. 330 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இதுவரை வெளியான சூர்யா படங்களிலேயே அதிகம் வசூலித்த படமாக மாறியுள்ளது. முக்கியமாக, தமிழகத்திலேயே ரூ. 175 கோடிக்கும் அதிகமாக வசூலித்துடன் 1 கோடி டிக்கெட்கள் விற்பனையான சூர்யாவின் படம் என்கிற சாதனையையும் படைத்துள்ளது.
இன்றுவரை கணிசமான ரசிகர்களுடன் கருப்பு திரையிடப்பட்டு வரும் வேளையில், இப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வருகிற ஜூன் 12 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் தெலுங்கு வடிவமான வீரபத்ருடூ படமும் அதேநாளில் வெளியாகிறது.
Advertisement
Advertisement
நடிகர் சூர்யா கருப்பு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வெளியீட்டுக்காகக் காத்திருக்கிறார். இப்படத்தை வெங்கட் அட்லுரி இயக்கியிருப்பதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதன் தொடர்ச்சியாக இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கிவரும் சூர்யா - 47 திரைப்படமும் திரைக்கு வரவுள்ளதால் இந்தாண்டே சூர்யா இன்னும் 2 வெளியீடுகளைக் காணவுள்ளார்.
The OTT release date for actor Suriya's karuppu has been announced.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.