ஆத்தி யார்ரா இவ... சீன் முதல் பாடல் அப்டேட்!
சீன் முதல் பாடல் தேதி...

நடிகர் சூர்யா நடிப்பில் உருவான சீன் திரைப்படத்தின் முதல் பாடல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யாவின் 47 ஆவது திரைப்படம் சீன். இயக்குநர் ஜித்து மாதவன் இப்படத்தினை இயக்க, சூர்யாவின் புதிய தயாரிப்பு நிறுவனமான ழகரம் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது.
இதில், சூர்யா காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். படத்தின் டீசர் வெளியாகி பெரிய கவனம் பெற்றிருந்தது. தற்போது, இப்படத்தின் முதல் பாடலான, ஆத்தி யார்ரா இவ பாடல் அக். 8 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுஷின் ஷியாம் இசையமைப்பில் இது உருவாகியுள்ளது.
Advertisement
Advertisement
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து வெளியாகும் படம் என்பதால் நவ. 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்தப் படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.