முகப்பு
செய்திகள்

பவிஷின் லவ் ஓ லவ் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

பவிஷின் லவ் ஓ லவ் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது தொடர்பாக...

Updated On : 29 ஏப்ரல் 2026, 3:33 pm IST
பவிஷின் லவ் ஓ லவ் படத்தின் படப்பிடிப்பு நிறைவு - படம்: எக்ஸ்
பகிர்:

நடிகர் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் நாயகனாக நடித்து வந்த புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு தெரிவித்துள்ளது.

தனுஷ் இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படத்தில் நாயகனாக பவிஷ் நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, பவிஷ் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபரில் தொடங்கப்பட்டது. இந்தப் படத்துக்கு லவ் ஓ லவ் என்று பெயரிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

போகன் திரைப்பட இயக்குநர் லக்‌ஷ்மனிடம் உதவி இயக்குநராக இருந்த மகேஷ் ராஜேந்திரன் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் தெலுங்கு யூடியூப் பிரபலம் நாக துர்கா நாயகியாக நடித்துள்ளார்.

மேலும் இந்தப் படத்தில் இயக்குநர்கள் செல்வராகவன், கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சென்னை மற்றும் உதகையில் நடைபெற்று வந்த, இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இளம் தலைமுறையினரைக் கவரும் வகையிலான காதல் பொழுதுபோக்குத் திரைப்படமாக இப்படம் உருவாகிவுள்ளதாகக் கூறப்படுகிறது.

summary

The film crew has announced that the filming of the new movie starring Pavish actor Dhanush's nephew has been completed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.