படப்பிடிப்பு நிறைவு! ஜூலை வெளியீடாக ஆர்யா - 40?
ஆர்யா - 40 குறித்து....
நடிகர் ஆர்யாவின் 40-வது படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
நடிகர் ஆர்யா நடிப்பில் இறுதியாக வெளியான மிஸ்டர் எக்ஸ் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வணிக ரீதியாக தோல்விப்படமானது.
தற்போது, பா. இரஞ்சித்தின் வேட்டுவம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ஆக்ஸ்ட் வெளியீடாகத் திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement
தொடர்ந்து, இயக்குநர் ஜீவா சங்கர் இயக்கத்தில் தன் 40-வது திரைப்படத்தில் ஆர்யா நடித்து வந்தார். ராஜா ராணி திரைப்படம் போல் காதல் திரைப்படமாக உருவாகும் இதில், நாயகிகளாக நடிகைகள் நிகிலா விமலும் வைஷ்ணவி சைதன்யாவும் நடிக்கின்றனர்.
படத்தின் படப்பிடிப்பு சென்னை உள்பட பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில், முழுமையாக நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் ஜூலை வெளியீடாகத் திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Filming for actor Arya's 40th movie has been completed.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.