பவிஷ் நடிப்பில் உருவாகும் அட்டாக்கர்!
நடிகர் தனுஷின் சகோதரி மகனான பவிஷ் நடிக்கும் அடுத்த படத்தின் முதற்பார்வை விடியோ இன்று வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷின் சகோதரி மகனான பவிஷ் நடிக்கும் அடுத்த படத்தின் முதற்பார்வை விடியோ இன்று வெளியாகியுள்ளது.
தனுஷ் இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் பவிஷ். தனுஷின் சகோதரியின் மகனான இவரின் முதல் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
இவரின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு தொடங்கியது. போகன் திரைப்பட இயக்குநர் லக்ஷ்மனிடம் உதவி இயக்குநராக இருந்த மகேஷ் ராஜேந்திரன் இப்படத்தை இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. இந்தப் படத்தின் வெளியீடு அறிவிக்கப்படாத நிலையில், தற்போது பவிஷ் கதாநாயகனாக நடிக்கும் அடுத்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement
’அட்டாக்கர்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் வாலிபால் விளையாட்டு வீரராக பவிஷ் நடித்துள்ளார். வாலிபால் விளையாட்டை மையப்படுத்தி தமிழில் வெளியாகும் முதல் படமான இதனை இயக்குநர் தாமோ நாகபூஷனம் இயக்குகிறார்.
படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் முதற்பார்வை விடியோ இன்று வெளியிடப்பட்டுள்ளது.
The first-look video of the upcoming film starring Pavish, the son of actor Dhanush's sister, was released today.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.