முகப்பு
செய்திகள்

மானமே போகுது... அஜித் வேதனை!

ரசிகர்களின் செயலால் அஜித் வேதனையடைந்துள்ளார்...

Updated On : 10 பிப்ரவரி 2026, 1:18 pm IST
அஜித் குமார்
பகிர்:

நடிகர் அஜித் குமாரின் பேச்சு இணையத்தில் வைரலாகியுள்ளது.

நடிகர் அஜித் நடிப்பில் மட்டுமல்லாமல் அஜித் குமார் ரேஸிங் என்கிற நிறுவனத்தை துவங்கி கார் ரேஸிங்கிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

ஓராண்டாகா பல நாடுகளில் நடந்த சர்வதேச கார் பந்தயங்களில் கலந்துகொண்டு குறிப்பிடத்தக்க வெற்றிகளையும் பெற்றுள்ளார். இதனால், அஜித் குமாரால் கார் பந்தயம் குறித்து பரவலான கவனமும் ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தற்போது, துபையில் நடைபெறும் கார் பந்தயத்திற்காக பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். தன் குழுவினருடன் தினமும் நீண்ட நேரம் பயிற்சியில் இருப்பதால் அவரைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வருகையும் தருகின்றனர்.

எவ்வளவு பேர் வந்தாலும் நேரம் ஒதுக்கி அஜித்தும் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார். ஆனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை கார் பந்தய சாலை பகுதிக்குச் சென்ற ரசிகர்களில் சிலர் விலை மதிப்புமிக்க பந்தய கார்களில் ஏறி அமர்ந்து புகைப்படம் எடுத்திருக்கின்றனர்.

மேலும், குடி போதையில் வந்த சிலரும் கத்தி, கூச்சல் போட்டபடி பிற வெளிநாட்டு வீரர்களின் கார்களை சூழ்ந்ததாகத் தெரிகிறது.

இதனைக் கண்ட நடிகர் அஜித் குமார் அந்த ரசிகர்களிடம், “தயவு செய்து பொறுப்பாக நடந்துகொள்ளுங்கள். இது திரையரங்கம் கிடையாது. நம்ம மானமே போகுது.” எனத் தன் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். ரசிகர்களின் இந்தப் பொறுப்பற்ற செயலைச் சுட்டிக்காட்டி பேசிய அஜித்தின் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

summary

actor ajith kumar spokes about some fans

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments