முகப்பு
செய்திகள்

சசிகுமார் நடிப்பில் திரைப்படமாகும் நாவல்!

இரா. சரவணன் - சசிகுமார் கூட்டணியில் புதிய திரைப்படம்...

Updated On : 25 ஜனவரி 2026, 11:41 am IST
இயக்குநர் இரா. சரவணன், மில்லியன் டாலர் தயாரிப்பாளர் யுவராஜ், சசிகுமார்
பகிர்:

இயக்குநர் இரா. சரவணன் இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடிக்கவுள்ளார்.

கத்துக்குட்டி, உடன் பிறப்பே உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி கவனம் ஈர்த்தவர் இயக்குநர் இரா. சரவணன். இறுதியாக, நடிகர் சசிகுமாரை வைத்து நந்தன் என்கிற முக்கியமான அரசியல் படமொன்றை எடுத்தார். ஆனால், கலவையான விமர்சனங்களால் அப்படம் சரியான வரவேற்பைப் பெறவில்லை.

இந்த நிலையில், சரவணன் எழுதிய சங்காரம் என்கிற நாவலை அவரே இயக்கவும் உள்ளார். இதில், நாயகனாக சசிகுமார் நடிக்க, மில்லியன் டாலர் பிக்சர்ஸ் நிறுவனம் இதனைத் தயாரிக்கிறது.

Advertisement

Advertisement

படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.