முகப்பு
செய்திகள்

நடிகர் அரவிந்த் ஆகாஷ் திருமணம்! காதலியை கரம்பிடித்தார்!

நடிகர் அரவிந்த் ஆகாஷ் திருமணம் நேற்று மலேசியாவில் நடைபெற்றது.

Updated On : 2 ஜூலை 2026, 7:00 pm IST
அரவிந்த் ஆகாஷ் - சாத்வி
பகிர்:

‘சென்னை 28’ படத்தின் மூலம் பிரபலமான நடிகர் அரவிந்த் ஆகாஷ் திருமணம் நேற்று நடைபெற்றது.

ஹே ராம் படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான நடிகர் அரவிந்த் ஆகாஷ் தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிப் படங்களில் நடித்துள்ளார்.

பல படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் இவர் பெரிதும் கவனிக்கப்பட்டது சென்னை 28 படத்தின் மூலமே. அதன் பின்னர், வெங்கட் பிரபு எடுத்த கோவா, மங்காத்தா, பிரியாணி, சென்னை 28-2, தி கோட் என அனைத்துப் படங்களிலும் இவர் நடித்திருந்தார். அதுதவிர சின்னத்திரை சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார்.

Advertisement

Advertisement

தற்போது 50 வயதான நடிகர் அரவிந்த் ஆகாஷ் தனது நீண்ட நாள் காதலியான சாத்வியை நேற்று திருமணம் செய்தார். மலேசியாவில் நடைபெற்ற இவரது திருமணத்தில் இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் வைபவ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இவர்கள் திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

வெங்கட் பிரபு மற்றூம் குடும்பத்தினருடன் அரவிந்த் ஆகாஷ் - சாத்வி
summary

Actor Arvind Akash gets married! He ties the knot with his girlfriend!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments