முகப்பு
செய்திகள்

நாகராஜ் மஞ்சுளேவின் கஷாபா டீசர்..! ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற முதல் இந்தியரின் பயோபிக்!

பிரபல மராத்தி இயக்குநர் நாகராஜ் மஞ்சுளேவின் புதிய படத்தின் ரிலீஸ் தேதி குறித்து...

Updated On : 2 ஜூலை 2026, 3:26 pm IST
கஷாபா டீசரில் இடம்பெற்ற காட்சிகள். - படங்கள்: எக்ஸ் / ஜியோ ஸ்டூடியோஸ்.
பகிர்:

பிரபல மராத்தி இயக்குநர் நாகராஜ் மஞ்சுளேவின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கஷாபா’ என்ற திரைப்படம் அடுத்தாண்டு ஜனவரி 1ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

மராத்தியில் தேசிய விருது வென்ற ஃபான்றி, சைரத் ஆகிய திரைப்படங்களில் மூலம் இந்திய அளவில் புகழ்பெற்றவர் இயக்குநர் நாகராஜ் மஞ்சுளே. இவர் கடைசியாக மட்கா கிங் என்ற இணையத் தொடரை இயக்கினார்.

தற்போது, குத்துச் சண்டையில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியரின் பயோபிக்கை ‘கஷாபா’ என்ற பெயரில் எடுத்து வருகிறார். ஜியோ ஸ்டூடியோஸ், ஆத்பட் புரடக்‌ஷன்ஸ் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறார்கள்.

Advertisement

Advertisement

பின்லாந்தில் 1952ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்ஸில் இந்தியாவைச் சேர்ந்த கஷாபா தாதாசாகேப் ஜாதவ் (கே.டி. ஜாதவ்) வெண்கலம் வென்று வரலாறு படைத்தார். சுதந்திர இந்தியாவில் தனிநபர் பிரிவில் முதல்முறையாக பதக்கம் வென்றவராக ஜாதவ் சாதனை படைத்தார்.

இந்த நிலையில், இந்தப் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதன் முடிவில் படம் அடுத்தாண்டு ஜனவரி 1ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா புதியதாக சுதந்திரம் அடைந்த பிறகான காலகட்டத்தில் நடக்கும் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. தடைகளைத் தாண்டி எப்படி அவர் ஒலிம்பிக்ஸில் பதக்கம் வெல்கிறார் என்பதை மையமாக வைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்துக்கு நாகராஜ் மஞ்சுளேவின் ஆஸ்தான இசையமைப்பாளர் அஜய் அடுல் இசையமைத்துள்ளார்கள். படத்தில் நாயகனாக யார் நடித்துள்ளார்கள் என்று டீசரில் முகம் காட்டப்படவில்லை. இதனால், எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தப் படத்தில் ஜிதேந்திர ஜோஷி, மகேஷ் மஞ்சுரேக்கர், கிரீஷ் குல்கர்னி, வைபவ் மங்களே, சாயா கதம், கார்கி குல்கர்னி நடித்துள்ளார்கள்.

summary

Nagraj Manjule-directed sports biopic 'Khashaba' to release next year

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments