பிஆர் ஷோ! தயாரிப்பாளரான பிரதீப் ரங்கநாதன்!
நடிகர் பிரதீப் ரங்கநாதன் தயாரிப்பாளர் ஆனார்...
நடிகர் பிரதீப் ரங்கநாதன் தன் முதல் திரைப்படத்தைத் தயாரித்து வருகிறார்.
கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிய பிரதீப் ரங்கநாதன், லவ் டுடே படத்தின் மூலம் நடிகராகவும் புகழ்பெற்றார். அடுத்தடுத்து வெளியான டிராகன், டியூட் ஆகிய படங்கள் ஹிட் அடித்ததால் தற்போது முன்னணி நடிகராக மாறியுள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் நல்ல மார்க்கெட்டை வைத்திருப்பதால் பிரதீப்பின் திரைப்படங்களைத் தயாரிக்க பல முன்னணி நிறுவனங்கள் முயன்று வருகின்றன.
இந்த நிலையில், நடிகை மமிதா பைஜூ நாயகியாகவும் முக்கிய கதாபாத்திரங்களில் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து, நடிகைகள் ஸ்வாசிகா, அனாமிகா மகி ஆகியோர் நடிக்கும் புதிய திரைப்படத்தை பிரதீப் ரங்கநாதன், பிஆர் ஷோ என்கிற தன் தயாரித்து நிறுவனம் மூலம் தயாரித்து வருவதாக அறிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
பிரதீப்பின் கதையை, ஆல்பா யூனிட் என்கிற பெயரில் ஆறு பேர் இணைந்து இயக்கி வருகின்றனர். இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.
Actor Pradeep Ranganathan is producing his debut film.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.