முகப்பு
செய்திகள்

நான் பிரதீப் ரங்கநாதன் ரசிகன்: நடிகர் சிவராஜ்குமார்

நடிகர் சிவராஜ்குமார், பிரதீப் ரங்கநாதன் குறித்து பேசியது...

Updated On : 4 ஜூலை 2026, 5:15 pm IST
நடிகர்கள் சிவராஜ்குமார், பிரதீப் ரங்கநாதன்
பகிர்:

நடிகர் சிவராஜ்குமார் விருது விழா நிகழ்வில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் குறித்து பேசியுள்ளார்.

கன்னட திரைத்துறையில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவராஜ்குமார். இவர் நடித்த பல திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் என்பதால் ரசிகர்களின் விருப்பமான நடிகராகவும் உள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படத்தில் இவருக்கான காட்சி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதால் தமிழ் சினிமாவிலும் அவருக்கு ரசிகர்கள் அதிகரித்தனர்.

தற்போது, டூரிஸ்ட் பேமிலி இயக்குநர் அபிஷன் நாயகனாக நடிக்கும் திரைப்படத்தில் அவருக்கு அப்பாவாக சிவராஜ்குமார் நடித்து வருகிறார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், விருது விழா நிகழ்வில் பேசிய நடிகர் சிவராஜ்குமார், ”நடிகர் பிரதீப் ரங்கநாதனின் அனைத்து திரைப்படங்களையும் பார்த்துவிட்டேன். அவரது நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. பிரதீப்பின் ரசிகனாகிவிட்டேன். நடிகர் தனுஷைப் பிடிக்கும் என்பதால் பிரதீப் அவரைப் போலவே தோற்றமளிக்கிறார்.” எனத் தெரிவித்துள்ளார்.

நடிகர் பிரதீப் ரங்கநாதன் தற்போது நடிகை மமிதா பைஜூவை நாயகியாக வைத்து புதிய திரைப்படத்தைத் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Actor Shiva Rajkumar spoke about actor Pradeep Ranganathan at an awards ceremony.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments